சூர்யாவுடன் ஆக்‌ஷனில் குதிக்கும் ஸ்ருதிஹாசன்?

Bookmark and Share

சூர்யாவுடன் ஆக்‌ஷனில் குதிக்கும் ஸ்ருதிஹாசன்?

ஹரி இயக்கவுள்ள சிங்கம்-3 படத்தில் சூர்யாவுக்கு மனைவியாக அனுஷ்கா நடிக்கிறாரார். மேலும், இதே படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதிஹாசன் இப்போது கமிட்டாகியிருக்கிறார்.

பூஜை படத்திலேயே ஸ்ருதியின் பர்பாமென்ஸைப் பார்த்து வியந்து போன ஹரி, இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு அதிரடியான வேடம் ஒன்று கொடுத்துள்ளாராம். ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆக்சன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், அனுஷ்கா மனைவியாக நடிப்பதால், சிங்கம்-2 வில் ஹன்சிகா சூர்யாவை ஒன்சைடாக லவ் பண்ணியது போன்று இந்த படத்திலும் ஸ்ருதிஹாசன் ஒன்சைடாக சூர்யாவை லவ் பண்ணும் காட்சிகளும் இருக்கிறதாம். 

அதேசமயம், ஸ்ருதிஹாசனும், சூர்யாவைப்போன்று சிஐடி போலீசாக? இல்லை வேறு ரூபத்தில் அவருக்கு உதவி செய்கிறாரா? என்பது சஸ்பென்சாக வைத்துள்ளனர்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions