சூர்யாவுக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா?

Bookmark and Share

சூர்யாவுக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா?

நடிகர் சிவகார்த்திகேயன், தன்னை வேலை செய்ய விடாமல் சிலர் தடுப்பதாக ரெமோ நன்றி விழாவில் கண்ணீர்விட்டு பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிலர் இவரது கால்ஷீட்டை வாங்கிவைத்து தங்களுக்கு இவர் படம் பண்ண வேண்டும் என மிரட்டி வருவதாகவும் சொல்லப்பட்டது. ஒருவழியாக இந்த பிரச்சனை சமீபத்தில் சுமுகமாக தீர்க்கப்பட்டது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடித்துத்தர சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டுவிட்டார்.

இது ஒருபக்கம் இருக்க, சூர்யா கடந்த சில வருடங்களாக ஒன்று தன் சொந்த பேனரில் இல்லையென்றால் தனது உறவினர்களின் பேனரில் மட்டுமே நடித்து வருகிறார்.
இதையும் அதையும் ஒப்பிட்டு எப்படி சூர்யா, தனக்கு வேண்டியவர்களுக்கு படம் செய்கிறாரோ அதேபோல்தான சிவகார்த்திகேயனும் செய்கிறார்.

ஆனால் அவரை மட்டும் ஞானவேல் ராஜா ஏன் துரத்தி துரத்தி சம்மதிக்க வைத்தார்? அவர் வீட்டில் உள்ளவருக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா என விவரம் தெரிந்தவர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions