என் அதிர்ஷ்ட ஹீரோ சூர்யா: தமன்னா

Bookmark and Share

என் அதிர்ஷ்ட ஹீரோ சூர்யா: தமன்னா

பி.வி.பி.சினிமா நிறுவனம் தயாரித்து, நாகார்ஜுன்-கார்த்தி-தமன்னா ஆகியோர் நடித்துள்ள ‘தோழா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில், நடிகர் சூர்யா கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார்.

நடிகர்கள் நாகார்ஜுன், கார்த்தி, தமன்னா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். தமன்னா பேசியதாவது:-

‘‘நான் நடிக்கிற படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதாகவும், எனவே என்னை அதிர்ஷ்ட தேவதை என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். நான், அதிர்ஷ்ட தேவதை அல்ல. உண்மையிலேயே அதிர்ஷ்ட நாயகன், சூர்யாதான். அவரை என்னுடைய அதிர்ஷ்ட நாயகன் என்று சொல்லலாம்.

‘பாகுபலி’ படவிழாவில் சூர்யா கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டார். அந்த படம் ரூ.600 கோடி வசூல் செய்தது. இப்போது நான் நடித்திருக்கும் ‘தோழா’ படத்தின் பாடல்களையும் சூர்யா வெளியிட்டு இருக்கிறார். இந்த படமும் வசூலில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.’’


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions