தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?

Bookmark and Share

தல, தளபதி, சூர்யா பெண்கள் பற்றி என்ன சொன்னார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் விஜய், அஜித், சூர்யா. இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே திரையரங்கம் திருவிழா போல் காட்சியளிக்கும்.

அந்த வகையில் இவர்கள் படங்களில் பெண்களை போற்றும் வசனங்கள் சமீப காலமாக அதிகமாக இடம்பிடிக்கின்றது கவணித்துள்ளீர்களா?.

அஜித் வேதாளம் படத்தில் ‘போகட்டும் சார் பொண்ணுங்கள் நிம்மதியா ஸ்கூல், காலேஜ், வேலைக்கு போகட்டும்’ என பேசியது பெண்கள் மத்தியில் மட்டுமில்லை அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.

இளைய தளபதி பற்றி சொல்லவே தேவையில்லை, தொடர்ந்து அவர் படங்களின் தங்கச்சி செண்டிமெண்ட் இருந்து வருகின்றது, அதிலும் தெறி படத்தில் அவர் மருத்துவமனையில் பேசும் காட்சி எல்லோரையும் உருக வைத்தது.

சூர்யா கூட லேட்டஸ்டாக வந்த சிங்கம்-3 படத்தில் ‘தாய், தங்கை தவிற மற்ற எல்லோரையும் தவறாக கண்ல தான் பார்ப்பீங்களாடா, தப்பில்லை’ என பேசி அப்லாஸ் அள்ளினார்.

இப்படி உங்கள் பேவரட் நாயர்களே பெண்கள் மீது இத்தனை மரியாதை செலுத்தும் போது ரசிகர்களாகிய நீங்களும் இதை பின்பற்றினால் சந்தோஷமே.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions