சூர்யாவைத் தொடர்ந்து விஜய்யும் சீனா செல்கிறார்!

Bookmark and Share

சூர்யாவைத் தொடர்ந்து விஜய்யும் சீனா செல்கிறார்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ஏழாம் அறிவு. இந்த படத்தில் போதிதர்மர் இந்தியாவில் இருந்து சீனா சென்று அங்குள்ள மக்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக்கொடுத்ததாக அப்படத்தில் கதை பண்ணியிருந்தார் முருகதாஸ்.

அதனால், அப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு சீனாவில்தான் நடைபெற்றது. அதோடு, சீனாவில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை அப்படத்தின் பாடல்களில் பயன்படுத்தியிருந்தார் ஹாரிஸ் ஜெயராஜ்.

இந்நிலையில், கத்தி படத்தைப்போன்று அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் படப்பிடிப்பும் கொல்கத்தாவில்தான் தொடங்குகிறது என்று இதற்கு முன்பு செய்திகள் வெளியான நிலையில், இப்போது சீனாவில் நடக்கயிருப்பதாக புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.

அதுவும் இதுவரை கேமரா கண்கள் அதிகமாக படாத லொகேசனாக பார்த்து வந்திருக்கிறாராம் அட்லி. அப்படி அவர் பார்வையிட்ட லொகேசன்கள் அனைத்தையும் வீடியோ பண்ணி வந்து விஜய்யின் பார்வைக்கும் கொடுத்திருக்கும் அட்லி, சீனாவில் பெரும்பாலான காட்சிகள் மட்டுமின்றி இரண்டு பாடல்களையும் படமாக்கும் திட்டமும் வைத்திருக்கிறாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions