ரசிகர்களுடன் அன்போடு உரையாடும் சூர்யா!

Bookmark and Share

ரசிகர்களுடன் அன்போடு உரையாடும் சூர்யா!

விஜய், அஜித்தின் ஆரம்ப காலத்திலிருந்து அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது அந்த நிலை மாறி விட்டது. ரசிகர்களை சந்திக்க யாருமே நேரம் ஒதுக்குவதில்லை.

மேலும் சில நடிகர்கள் படப்பிடிப்புக்கு அவுட்டோர் செல்லும்போது தங்களை காண ஆவலுடன் வரும் ரசிகர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகிறார்கள். இதில் சூர்யா முதலிடம் பிடிக்கிறார். சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பு, ஆந்திரா, தமிழ்நாடு, மலேசியா என பல லொகேசன்களில் நடைபெற்றபோது தன்னை சந்திக்க வந்த ரசிகர் ரசிகைகளிடம் அவ்வப்போது சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை சந்தோசப்படுத்தினாராம்.

படப்பிடிப்பு இல்லாதபோது ரசிகர்களிடம் அன்போடு உரையாடியும் மகிழ்ந்திருக்கிறார் சூர்யா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions