ஹாலிவுட் ரீமேக்கில் சூர்யா, விக்ரம், கார்த்தி?

Bookmark and Share

ஹாலிவுட் ரீமேக்கில் சூர்யா, விக்ரம், கார்த்தி?

இந்தியில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பிரதர்ஸ்’. இப்படத்தில் சித்தார்த் மல்கோத்ரா, ஷாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தை கரண் மல்கோத்ரா இயக்கியுள்ளார். இது ஹாலிவுட்டில் வெளிவந்த ‘வாரியர்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். ‘பிரதர்ஸ்’ வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. 

இந்நிலையில், இப்படத்தை தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதில், முதலில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர். தமிழில் ரீமேக்காகும் இப்படத்தில் சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

அதேபோல், தெலுங்கு ரீமேக்கில், ராம்சரண், பிரபாஸ், ராணா ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை எந்தளவுக்கு பெறுகிறதோ, அதைப் பொருத்தே இதில் யார் நடிக்க சம்மதிப்பார்கள் என்பது தெரிய வரும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions