துக்கத்தில் இருந்த இயக்குனருக்கு ஓடிப்போய் உதவிய சூர்யா

Bookmark and Share

துக்கத்தில் இருந்த இயக்குனருக்கு ஓடிப்போய் உதவிய சூர்யா

பிரபலங்களில் சிலர் தங்களது சக கலைஞர்களுடன் ஆரோக்கியமான நட்பு வட்டாரத்தை வைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் விஷால், ஆர்யா, வெங்கட் பிரபு போன்றவர்களை குறிப்பாக கூறலாம்.

இந்நிலையில் கவண் பட ரிலீஸ் பிஸியில் இருந்த கே.வி. ஆனந்த்தின் அப்பா திடீரென்று உயிரிழந்திருக்கிறார். அவருக்கு ஆறுதல் சொல்ல சினிமா பிரபலங்களில் விஜய் சேதுபதியை தவிர யாரும் போகவில்லை என்ற தகவல் வந்தது.

ஆனால் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மாற்றான், அயன் ஆகிய படங்களில் நடித்த சூர்யா சென்றிருக்கிறார். சுமார் ஐந்து மணி நேரம் அங்கேயே இருந்து கடைசி நேர விஷயங்களுக்காக தேவைப்படும் மற்ற விஷயங்களையும் செய்தாராம். கே.வி. ஆனந்த் நீங்கள் செல்லுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியும், மயானம் வரைக்கும் சென்றிருக்கிறார் .


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions