நான் நடிக்கவேண்டிய படத்தில் என்னுடைய போட்டி நடிகரா? – செம்ம கடுப்பில் சூர்யா

Bookmark and Share

நான் நடிக்கவேண்டிய படத்தில் என்னுடைய போட்டி நடிகரா? – செம்ம கடுப்பில் சூர்யா

‘காக்க காக்க’ என்ற ஸ்டைலிஷான படம் மூலம் சூர்யாவை அனைத்து ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அந்தப் படத்திற்குப் பிறகுதான் சூர்யாவுக்கென ரசிகர்கள் சேர்ந்தார்கள்.

சூர்யாவை அந்தப் படத்தில் நாயகனாக்க பெரும் முயற்சி எடுத்தவர் ஜோதிகா. முதலில் தயங்கிய கௌதம் மேனன் பின்னர் அதற்கு சம்மதித்தார். படமும் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து ‘வாரணம் ஆயிரம்’ படத்திலும் கௌதம் மேனன் – சூர்யா கூட்டணி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.

ஒரு கட்டத்தில் தன்னைப் பெரிய ஹீரோவாக நினைக்க ஆரம்பித்த சூர்யா, தன்னை மாற்றிய கௌதம் மேனனிடமே கதையில் ‘கரெக்ஷன்’ சொன்னதால், அவர்கள் ஆரம்பிப்பதாக இருந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பூஜையுடன் நின்று போனது. சூர்யா, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. படத்திலிருந்து விலகியதற்கான விளக்கக் கடிதத்தை வெளியிட்டு கௌதம் மேனனை அசிங்கப்படுத்தினார். இதன் பின்னர் இந்தக் கூட்டணி வாய்ப்பேயில்லை என்ற நிலை உருவானது. இருந்தாலும் சிலரது விடாமுயற்சியில் மீண்டும் ‘துருவ நட்சத்திரம்’ படம் ஆரம்பமாகலாம் என்றார்கள்.

அவர்கள் சொன்னது போல் படம் ஆரம்பமாகிவிட்டது, ஆனால், கௌதம் மேனன் சூர்யாவை மாற்றிவிட்டு விக்ரமை ஹீரோவாக்கிவிட்டார். வேறு யாரை வைத்து இந்தப் படத்தை ஆரம்பித்திருந்தாலும் சூர்யா கண்டு கொண்டிருக்க மாட்டார்.

ஆனால், அவர் போட்டியாக நினைக்கும் விக்ரமை வைத்து கௌதம் மேனன் ஆரம்பித்திருப்பது சூர்யாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். கோலிவுட்டில் இந்த விவகாரம்தான் இப்போது ‘ஹாட் டாபிக்’ ஆக ஓடிக் கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
எஸ்.ஜே.சூர்யாவுடன் எல்லை மீறிய கவர்ச்சியில் நந்திதா!
டப்பிங் பணிகளை தொடங்கிய நெஞ்சம் மறப்பதில்லை!
மகள் தியாவுக்காக பைக் ஓட்டும் சூர்யா
சூர்யாவை மயக்கிய முணைந்த தலைவர்கள் !
ஜெ.வை சந்தித்த சூர்யா குடும்பம்: களை கட்டப் போகும் நடிகர் கார்த்தியின் திருமணம்!
ஏழைகளுக்கு உதவ மக்கள் இயக்கம் துவங்குவேன்: நடிகர் சூர்யா அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions