கொடி கட்டிப் பறந்த போதே குடியால் செத்து போன காமெடி கிங்: நடுத்தெருவில் குடும்பம்

Bookmark and Share

கொடி கட்டிப் பறந்த போதே குடியால் செத்து போன காமெடி கிங்: நடுத்தெருவில் குடும்பம்

மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் அந்த நாடக நடிகர். கர கர குரல்.வித்தியாசமான உடல் மொழி என அவர் தமிழ் திரையுலகில் நுழைந்த போது அனைவருக்கும் பிடித்துப் போனது.அவர் தான் நகைச்சுவை கிங் சுருளிராஜன்.

அறுபது காலகட்டங்களில் சினிமாவிற்கு வந்தாலும் எழுபதுகளில் தான் பெயர் சொல்வது போல படங்கள் அமைந்தது. ஆனால் பசியும் பட்டினியுமாக நாடக உலகில் ..ஊர் ஊராக அலைந்த போதே சாராயம் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார் சுருளி.

சுருளிராஜன், நகைச்சுவையில் இரண்டு அர்த்தமுள்ள வசனங்களை நகைச்சுவை என்ற பெயரில் பேசி நடித்த முதல் நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் தான்.அவர் வாயைத் திறந்தாலே தியேட்டர் அதிரும். ஹீரோவாக நடிக்கும் நிலைக்கு உயர்ந்தார்.பெரிய ஹீரோக்கள் சுருளி கால்ஷீட்டுக்கு தவம் கிடந்தனர்.

இருபது மணி நேரங்கள் நடித்தார். தமிழ்நாடே கொண்டாடிய சுருளிக்கு வீட்டில்  நல்ல பெயர் இல்லை. காரணம் குடி. முழுக்க குடிக்கு அடிமையாகி இருந்தார்.மீளவே முடியாது என்கிற நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் படங்கள் தொடர்ந்து, குடித்துக் கொண்டும் இருந்தார். உடல் நலம் கெட்டுபோனது.

கல்லீரல், மண்ணீரல் இரண்டும் பாதிக்கப்பட்டது. படுக்கையில் விழுந்தார். படங்கள் எல்லாம் பாதியில் நின்றது. சம்பளப் பாக்கி பல லட்சங்கள் இருந்தது.யாரும் கொடுக்கவில்லை. மருத்துவமனைக்கு கூட பணம் இல்லை.

கடைசியில் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு இறந்து போனார் அந்த மகா கலைஞன்.பல நடிகர்கள் குறிப்பாக நகைச்சுவை நடிகர்களின் வாழ்க்கையில் குடிப்பழக்கம் பல அரிய கலைஞர்களின்உயிருக்கும் வாழ்க்கைக்கும் எமனாக இருந்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

நகைச்சுவை நடிகர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சோகம் நிறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.காலம் சென்ற சந்திரபாபு,நாகேஷ், அசோகன், சுருளிராஜன், கண்ணதாசன் இன்னும் பல கலைஞர்களை சோகமும், குடியும் அழித்ததாக செய்தி உண்டு.

கலைஞர்களின் வாழ்க்கையில் மது மாது இரண்டும் அவர்களது முன்னேற்றம், பணம், நிம்மதி ஆகியவற்றைஅழித்துவிடுகிறது.

ஒரு காலத்தில் புகழின் உச்சாணியில் இருந்தவர்களை இந்த இரண்டும் ஒட்டு மொத்தமாகசிதைத்துவிடுவதை நம்மால் கண்கூடாக காணமுடிகிறது.

தங்களது தவற்றை உணர்ந்து சுதாரித்துக்கொண்டுவிழிப்படைவதற்குள் மது அவர்களின் உடலின் முக்கிய பாகங்களை முற்றிலுமாக செயலிழக்கச்செய்துவிடுவதும் கண்கூடாக காணும் உண்மை.


Post your comment

Related News
காது கருகுகிற மாதிரி சசி அணியை மக்கள் திட்டுகிறார்கள் - ராமராஜன்
ஷூட்டிங்கில் கதறி அழுத ராமராஜன்! படக்குழு அப்சட்
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
இனி தளபதியே தமிழ் நாடு: மக்கள் நாயகன் ராமராஜன் திமுகவில்
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
சசிகலா, நடராஜன் கரங்களில் அகப்பட்ட அடிமைப் பெண் ஜெ... சொன்னது வலம்புரி ஜான்
போதகர் ஆனார் ராமராஜன்!
ஜெயலலிதாவால் என் கணவர் இப்படி ஆனாரா? பிரபல நடிகை விளக்கம்!
சௌந்தர்யாவை தொடர்ந்து இன்னொரு பெண் இயக்குனர் படத்தில் தனுஷ்!
ராமராஜன் உடல்நிலை பற்றி பரவிய திடீர் வதந்திAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions