சேதுராம ஐயராக மாறுகிறாரா சூர்யா..?

Bookmark and Share

சேதுராம ஐயராக மாறுகிறாரா சூர்யா..?

இதுவரை இந்திய மொழிகளில் ஒருபடம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை எடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது 1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான ஒரு சி.பி.ஐ.டைரிக்குறிப்பு படம் மட்டும்தான். இந்தப்படத்தில் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் வழக்கத்திற்கு மாறான மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி.  சொல்லப்போனால் மம்முட்டியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவருக்கு தமிழ்சினிமாவிலும் ஒரு இடத்தைப் பிடித்துக் கொடுத்தது இந்தப்படம்தான். 

இதன் அடுத்த பாகமான ஜகார்த்தா 1989ல் வெளியானது. அதன்பிறகு இதன் அடுத்தடுத்த பாகங்களாக 2004ல் சேதுராமையர் சி.பி.ஐயும் 2005ல் நேரறியான் சி.பி.ஐயும் வெளியாகின.  ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொருவிதமான வழக்கை டீல் செய்வார் மம்முட்டி  இதன் ஒவ்வொரு பாகங்களிலும் மம்முட்டியின் சேதுராமையர் கதாபாத்திரமும் மாறவில்லை. அவரது கெட்டப்பும் முதல் படத்தில் பார்த்ததுபோலவே தொடர்ந்தது. இந்த நான்கு பாகங்களையும் கெ.மது தான் இயக்கியிருந்தார். 

தற்போது இதன் ஐந்தாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஆனால் மம்முட்டி ஏற்கனவே நான்கு பாகங்களில் நடித்துவிட்டதால், அதுவே போதும் என்கிற அளவுக்கு அவருக்கு ஆர்வம் குறைந்துவிட்டது. அதுமட்டுமல்ல, இதன் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க தனது நண்பரான சுரேஷ்கோபியின் பெயரைத்தான் அவர் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் இப்போது புது திருப்பமாக இந்த சி.பி.ஐ கதையில் சேதுராம ஐயராக சூர்யா நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் கசிந்துள்ள்ளது. சமீபகாலமாக மலையாள திரையுலகின் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள சூர்யா, இதில் நடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அது தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions