ஹாலிவுட் நடிகரை காப்பி அடித்த சூர்யா

Bookmark and Share

ஹாலிவுட் நடிகரை காப்பி அடித்த சூர்யா

டிவிட்டரில் வந்த புதிதில் அனைவருமே பலப் பல தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு கட்டத்தில் திடீரெனக் காணாமல் போய்விடுவார்கள். அப்படி டிவிட்டரில் காணாமல் போனவர்களுக்கு சிறந்த உதாரணமாக ரஜினிகாந்தைச் சொல்லலாம்.

கடந்த மே மாதம் டிவிட்டர் கணக்கை ஆரம்பித்து சாதனையெல்லாம் படைத்தார். அதன் பின் ஆறு மாதம் கழித்துத்தான் அடுத்த டிவிட்டர் பதிவைப் போட்டார். தற்போது மீண்டும் காணாமல் போய்விட்டார். சமீபத்தில் டிவிட்டரில் இணைந்த சூர்யா முடிந்தவரை புதுப் புது பதிவுகளை போட்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஹாலிவுட் நடிகர் ஒருவரின் மீசையை மட்டும் காப்பி அடித்ததைப் பற்றிய ஒரு பதிவைப் போட்டிருந்தார். சூர்யா, ஜோதிகா நடித்து பாலா தயாரிப்பில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'மாயாவி'.

இந்தப் படத்தில் சூர்யா பென்சிலால் வரைந்தது போன்ற மீசையைத்தான் வைத்திருப்பார். அந்த மீசை ஹாலிவுட் நடிகரான கிளார்க் கேபிள் மீசையிலிருந்து காப்பியடிக்கப்பட்டதுதான் என்ற தகவலை சூர்யாவே வெளியிட்டிருக்கிறார்.

'மாயாவி' படம் வெற்றி பெறவில்லையென்றாலும் சிங்கம்புலி இயக்கத்தில் ஒரு கலகலப்பான படமாகவே அமைந்தது. “பத்து வருடங்கள் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை.

பாலா அண்ணா தயாரித்த முதல் படத்தில் நான் நாயகனாக நடித்தேன். பத்து வருடங்கள் கழித்து இப்போது நான் தயாரிப்பாளராக மாறியிருக்கிறேன்,” என சூர்யா மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions