சிறு குழந்தைகளை சிரிக்க வைக்காதது வருத்தம்: சூர்யா

Bookmark and Share

சிறு குழந்தைகளை சிரிக்க வைக்காதது வருத்தம்: சூர்யா

‘பசங்க 2’ குழந்தைகள் படமாக தயாராகியுள்ளது. இதில், சிறுவர்கள் திறமையாக நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கதையை பாண்டிராஜ் சொன்னபோதே பிடித்தது. எனக்கு இது முக்கிய படமாக இருக்கும். ஏற்கனவே வந்த ‘பசங்க’ படத்தின் கதை கிராமத்து சிறுவர்களை சார்ந்ததாக இருந்தது.

ஆனால், இந்த ‘பசங்க 2’ படம் நகரத்து சிறுவர்கள் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பற்றிய நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கும். குழந்தைகளை குழந்தைகளாக வளர்க்கவேண்டும் என்ற கருத்தும் இருக்கும். 

குழந்தைகளை படிப்பில் மட்டும் தீவிரப்படுத்தாமல், அவர்களிடம் இருக்கும் திறமைகளையும் வளர்க்கவேண்டும் என்ற விஷயத்தையும் பதிவு செய்துள்ளோம். நான் இந்த படத்தில் நடிப்பதற்காக சாதாரணமாகத்தான் சென்றேன்.

நடிக்க தொடங்கியதும் கதை உள்ளே இழுத்துக்கொண்டது. நாகேஷ், ஹாலிவுட் நடிகர்கள் ஜிம் கேரி, ராபின் வில்லியம்ஸ் ஆகியோரைப்போல் குழந்தைகளை சிரிக்க வைக்கும் படங்களில் இதுவரை நடிக்காமல் இருந்தது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

பெற்றோர், குழந்தைகள் அனைவரும் பார்க்கும் படமாக இது இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். 


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions