சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு! அதனால்தான் இப்படியுள்ளாரா

Bookmark and Share

சூர்யாவின் வாழ்வையே மாற்றிய அந்த விமான நிகழ்வு! அதனால்தான் இப்படியுள்ளாரா

தமிழ் சினிமாவில் தனது வியக்கத்தக்க நடிப்பின் மூலம் நீங்காத ஒரு இடத்தை பெற்றவர், நடிகர் சூர்யா. இவரது படத்தில் சண்டைக்காட்சிகளும் பஞ்ச் வசனங்களும் அனல் பறக்கும்.

ஆனால் நிஜ வாழ்வில் சூர்யா மிக சாதுவான கேரக்டர். இந்த வாழ்வை நன்கு புரிந்துள்ளவர். யாரிடமும் குரலை உயர்த்தி கூட பேசாத அவர், இதுவரை எந்தவொரு கெட்ட பழக்கத்துக்கும் அடிமையாகாதவர். இதற்கெல்லாம் காரணம் யாரென்றால் அவரது அப்பா சிவகுமார் தான்.

ஒருமுறை இவரும் சிவகுமாரும் மலேசியா விமானத்தில் செல்லும் போது பணிப்பெண்ணை பார்த்து, ‘ஏன் இவ்வளவு கம்மியாக தண்ணீர் தருகிறார்கள்’ என கேட்ட சூர்யாவிற்கு பணிப்பெண்ணிடம் இருந்து ஒரு கிளாஸ் எடுத்து கொடுத்து குடி என்றார்.

அதன் ஒரு துளி நாக்கில் பட்டதும், ‘என்னது இது கசக்குது?’ என்று கேட்க, ’இதுதான் வோட்கா நம்ம ஆளுங்க இதுலதான் மூழ்கி அழிஞ்சி போறானுங்க’ என சிவகுமார் கூற அப்போதிலிருந்து இப்போ வரை சூர்யாவுக்கு சிகரெட், மது என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஒருவேளை அவர் இதற்கெல்லாம் அடிமையாகி இருந்தால் நடிகர் ஆகியிருப்பாரா இல்லையா என்பது சந்தேகமே.

 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions