மராட்டிய மொழியில் படம் இயக்கும் சுசிகணேசன்!

Bookmark and Share

மராட்டிய மொழியில் படம் இயக்கும் சுசிகணேசன்!

பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப்பயலே, கந்தசாமி ஆகிய படங்களை இயக்கியவர் சுசிகணேசன். இதில் ஜீவன் நடித்த திருட்டுப்பயலே படம் வியாபாரரீதியாக பெரிய ஹிட்டாக அமைந்தது. ஆனால் விக்ரம் நடிப்பில் உருவான கந்தசாமி பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி தோல்வியடைந்தது.

அதனால் அதையடுத்து சுசிகணேசனுக்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திக்கு சென்று சார்ட்கட் ரோமியோ என்ற படத்தை இயக்கினார். அப்படம் தமிழில் அவர் இயக்கிய திருட்டுப்பயலே படத்தின் ரீமேக் ஆகும்.

இந்தநிலையில், அடுத்தபடியாக அவர் மராட்டிய மொழியில் ஒரு படம் இயக்குகிறாராம். அங்குள்ள பிரபல ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வரும் சுசிகணேசன், தற்போது நாட்டில் நிலவும் ஒரு முக்கியமான பிரச்சினையை மையப்படுத்தி அப்படத்தை இயக்குகிறாராம்


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions