ஜெட் வேகத்தில் முடிவுக்கு வரும் சுசீந்திரன் - விஷ்ணு படம்!

Bookmark and Share

ஜெட் வேகத்தில் முடிவுக்கு வரும் சுசீந்திரன் - விஷ்ணு படம்!

வெண்ணிலா கபடி குழு, ஜீவா வெற்றியை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மூன்றாவது முறையாக மாவீரன் கிட்டு எனும் புதிய படத்தில் இணைந்துள்ளது. நல்லுசாமி பிக்சர்ஸ் மற்றும் ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனம் இப்படத்தை கூட்டாக தயாரித்து வருகிறது.

சுசீந்திரனின் தம்பி தாய் சரவணன் இப்படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். பார்த்திபன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் சுசீந்திரனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15-ம் தேதி திண்டுக்கல்லில் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மேலும் அடுத்த மாதத்தில் இதன் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions