சுசீந்திரன் படத்துக்கு முதலிடம் கொடுக்கும் சூரி!

Bookmark and Share

சுசீந்திரன் படத்துக்கு முதலிடம் கொடுக்கும் சூரி!

தற்போது வடிவேலு, சந்தானம் போன்ற முன்னணி காமெடியன்கள் அனைவருமே ஹீரோக்களாகி விட்டதால், சூரியின் காட்டில் அடைமழையாகி விட்டது. ஒரே நேரத்தில் பத்து மெகா படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த காமெடியனாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதில், சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ரஜினி முருகன், விமலுடன் நடித்துள்ள மாப்ள சிங்கம், ஜெயம்ரவியுடன் நடித்துள்ள அப்பாடக்கர் ஆகிய படங்களில் இதுவரையில்லாத அளவுக்கு காமெடி ரகளை செய்திருக்கிறாராம் சூரி. குறிப்பாக, இந்த படங்களில் இவரும் இன்னொரு ஹீரோ போன்று கலக்கியிருக்கிறார். அதோடு பாடல் காட்சிகளிலும் ஹீரோக்களுடன் இணைந்து நடனமாடி, பாடி நடித்துள்ளார். ஆக, இப்போது ஓய்வே இல்லாமல் நடித்து வருகிறார் அவர்.

ஆனால் இப்படி பல படங்களில் பிசியாக இருந்தபோதும் வெண்ணிலா கபடிக்குழு படத்தில் தனக்கு புரோட்டா காமெடியை கொடுத்து தான் சினிமாவில் வளர காரணமாக இருந்த டைரக்டர் சுசீந்திரன் மட்டும் எப்போது கால்சீட் கேட்டாலும் உடனே கொடுத்து விடுகிறார் சூரி.

அதோடு, சுசீந்திரனின், பாண்டியநாடு, பாயும்புலி படங்களிலும் முக்கியமான காமெடியனாக நடித்த சூரி, அவர் அடுத்து இயக்கும் படத்திற்கும் எப்போது கால்சீட் கேட்டாலும் தருவதாக கூறியிருக்கிறாராம். ஆக, தனது படத்தில் காமெடியனாக சூரியை கேட்காமலேயே அவர் பெயரை சேர்த்துக்கொண்டு படப்பிடிப்பு தேதியை சொல்லி அனுப்புகிறார் சுசீந்திரன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions