மீண்டும் தயாரிப்பாளரான சுசீந்திரன்...!

Bookmark and Share

மீண்டும் தயாரிப்பாளரான சுசீந்திரன்...!

இளைய தலைமுறை இயக்குநர்கள் ஒரு பக்கம் இயக்குநராகவும்.. இன்னொரு பக்கம் தயாரிப்பாளராகவும் இரண்டு வழிகளில் பணம் பண்ணக்கற்றுக் கொண்டுவிட்டனர். இந்தப்பட்டியலில் இயக்குநர் சுசீந்திரனும் அடக்கம்.

ஏற்கனவே ஆதலால் காதல் செய்வீர் என்ற படத்தை தயாரித்த சுசீந்திரன் தற்போது வில் அம்பு என்ற படத்தைத் தயாரிக்கிறார். விஷால், காஜல் அகர்வால் நடிக்க ’பாயும் புலி’ படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார் சுசீந்திரன்.

இப்படத்தை இயக்கும் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம்... சத்தமில்லாமல் வில் அம்பு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார் சுசீந்திரன்.

ஸ்டார் ஃபிலிம் லேன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து  தன்னுடைய நல்லுசாமி பிக்சர்ஸ் பேனரில் தயாரிக்கும் இப்படத்தை ரமேஷ் சுப்ரமணியம் எழுதி, இயக்குகிறார்.

’வழக்கு எண் 18/9’ படப்புகழ் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிருதி, சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிக்கிறார்கள்.  ஒரே ஏரியாவில் வசிக்கும் பணக்கார இளைஞன் ஒருவனுக்கும், மிடில் கிளாஸ் இளைஞன் ஒருவனுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்கள்தான் ’வில் அம்பு’ படத்தின் கதையாம்.

இப்படத்தின் ஆடியோவை பாயும்புலி படப்பிடிப்பில் இருந்த விஷால் வெளியிட்டிருக்கிறார்.


Post your comment





Related News
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்
மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்
சுசீந்திரன் இயக்கும் படத்தின் தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions