நான்காவது முறையாக சுசீந்திரனுடன் இணையும் இமான்

Bookmark and Share

நான்காவது முறையாக சுசீந்திரனுடன் இணையும் இமான்

விஷாலை வைத்து ‘பாயும் புலி’ இயக்கிய சுசீந்திரன், அடுத்ததாக உதயநிதியை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு இமான் இசையமைக்கவுள்ளார். இதற்கு முன் சுசீந்திரன் இயக்கிய ‘பாண்டிய நாடு’, ‘ஜீவா’, ‘பாயும் புலி’ ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது.

இதை தொடர்ந்து நான்காவது முறையாக இப்படம் மூலம் சுசீந்திரனும் இமானும் இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த முந்தைய படங்களின் பாடல்கள் போல் இப்படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தப் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கின்றனர்.

உதயநிதி தற்போது இந்தியில் வெற்றி பெற்ற ஜாலி எல்.எல்.பி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார். அகமது இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 


Post your comment





Related News
“ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்
ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்
பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு
யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்
சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்
அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.!
கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
சுசீந்திரனின் `அறம் செய்து பழகு' படத்தின் புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions