மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்

Bookmark and Share

மாநகரம் படத்தை பாராட்டிய இயக்குனர் சுசீந்திரன்

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் புதுமுக இயக்குனர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். புது படங்களும் நிறைய வெளிவருகின்றன. இதுபோல வரும் மார்ச் 10 ம் தேதி புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ள மாநகரம் படம் வெளியாக இருக்கிறது. 

புதுபடங்களுக்கு வரவேற்பு கொடுக்கும் விதத்திலும், அவர்களை ஊக்கபடுத்தும் விதத்திலும் சில முக்கிய பிரபலங்களுக்கும் படம் வெளியாவதற்கு முன்பே திரையிடப்படும். இதன்படி இப்படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் படம் பற்றிய தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதில் இயக்குனர் லோகேஷ் படத்தின் கதையை சரியாக கோர்த்து சென்றுள்ளார், கதாபாத்திரங்களை உருவாக்கிய விதம் சரியாக இருக்கிறது. நடிகர் ராம் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார்.

சந்தீப் கிஷனின் நடிப்பு பாராட்டத்தக்கது. என்னுடைய அடுத்த படமான அறம் செய்ய பழகு படத்தில் அவரும் நடிப்பார். ராம தாஸ் படத்தின் மூன்றாவது ஹீரோ என்றே சொல்லலாம். ரெஜினா, சார்லி ஆகியோர் படத்தில் நன்றாக நடித்துள்ளார்கள். அனைவரும் படத்தை பார்க்கவேண்டும் என அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions