பாயும் புலி படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சுசீந்திரன்

Bookmark and Share

பாயும் புலி படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய சுசீந்திரன்

‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ராஜபாட்டை’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘பாண்டியநாடு’ உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார்.

இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சுசீந்திரன் கடந்த வருடம் வெளியான ‘ஜீவா’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். இப்படம் வெற்றி பெறவே ‘நேருக்கு நேர்’ என்னும் படத்தை தயாரித்து வருகிறார். தற்போது விஷாலை வைத்து ‘பாயும் புலி’ என்னும் படத்தை இயக்கிவரும் சுசீந்திரன், தனது பிறந்தநாளை பாயும் புலி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். இதில் விஷால், ‘பசங்க’ பட இயக்குனர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்துக் கொண்டனர்.

சுசீந்திரன் இயக்கிவரும் ‘பாயும் புலி’ படத்தில் விஷால் நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. 


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions