அதிரடி ஆக்ஷன் படத்தில் சுஷாந்த்

Bookmark and Share

அதிரடி ஆக்ஷன் படத்தில் சுஷாந்த்

டிடெக்டிவ் பயோம்கேஷ் பக்ஷி படம், வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நடிப்பு, அனைத்து தரப்பினராலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து, சுஷாந்த், கமர்ஷியல் சினிமா பக்கம் தனது பார்வையை திருப்பினார். அதன் பயனாக, சஜித் நாடியாத்வாலா இயக்கத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இப்படத்தின் கேரக்டருக்காக, விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள சுஷாந்த் சிங் ராஜ்புட், அங்கு இஸ்ரேலிய தற்காப்பு கலை நிபுணரான கிரவ் மகாவிடம், ஜூடோ, குத்துச்சண்டை, மல்யுத்தம் உள்ளிட்ட பயிற்சிகளை பெற உள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions