சுத்த தமிழை பேச பயிற்சி எடுக்கிறார் சுஷ்மாராஜ்!

Bookmark and Share

சுத்த தமிழை பேச பயிற்சி எடுக்கிறார் சுஷ்மாராஜ்!

கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு தமிழில் விஜய் ஆண்டனியின், இந்தியா பாகிஸ்தான் படத்தில் நடித்திருப்பவர் சுஷ்மாராஜ். அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அடுத்த அனுஷ்கா என்ற பலரும் அவரை குறிப்பிட்டதால் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது என்ற உற்சாகத்திலேயே காணப்பட்டார்.

அதோடு, தமிழில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே ரொமான்ஸ் மட்டுமின்றி, காதல் கணவனுடன் அதிரடியாக மோதிக்கொள்ளும் காட்சிகளிலும் நடித்திருக்கும் சுஷ்மாராஜ், இந்த படத்தில் எனது திறமையை நானே எதிர்பார்க்காத அளவுக்கு வெளிச்சம் போட்டிருக்கிறார் இயக்குனர்.

அதனால் இப்படம் மூலமே நான் தமிழக ரசிகர்களின் கவனத்தை இழுத்து விடுவேன் என்கிறார். மேலும், பெங்களூரில் இருந்து தமிழுக்கு வந்தபோது அட்டகத்தி நந்திதா தமிழ் பேசியது போலவே, தற்போது 50 சதவிகிதம் தமிழ் வார்த்தைகளை அழகாக பேசுகிறார் சுஷ்மா.

அதோடு, இன்னும் தமிழை நன்றாக பேசினால் மொழிப்பிரச்சினை இல்லாத நடிகை என்ற பெயரை எடுத்து அனைத்து தமிழ் டைரக்டர் களின் படங்களிலும் நடிக்கும் வாய்ப்பினை பெறலாம் என்பதால், தற்போது சுத்தமான தமிழ் பேச பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
நடிகைகள் சுவாதி, சுஷ்மாவுக்கு விரைவில் திருமணம்
ஒரே படத்தோடு காணாமல் போன அமைரா, சுஷ்மா ராஜ்!
சானியதாரா வாய்ப்பை தட்டிப்பறித்த சுஷ்மாராஜ்!
ஆடை வடிவமைப்பாளர் பணியையும் சேர்த்து செய்யும் சுஷ்மாராஜ்
எனது படிப்பும் நடிப்பும் இருக்கும் \'இந்தியா பாகிஸ்தான்\' – சுஷ்மா ராஜ்
அடுத்த அனுஷ்கா சுஷ்மாராஜ்!
இப்ப விஜய் ஆண்டனி, அடுத்து விஜய்யுடன் நடிப்பேன்!- சுஷ்மா ராஜ்
சுஷ்மாவின் அதிரடி வேட்டை!
தனுஷால் கைவிடப்பட்டவருக்கு சிம்பு அடைக்கலம்.
பாக்யராஜின் முருங்கைக்காய் ட்ரிட்மெண்ட் - முந்தானை முடிச்சு பாகம் 2.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions