அடுத்த அனுஷ்கா சுஷ்மாராஜ்!

Bookmark and Share

அடுத்த அனுஷ்கா சுஷ்மாராஜ்!

கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு, தமிழில் இந்தியா பாகிஸ்தான் படம் மூலம் என்ட்ரி கொடுத்திருப்பவர் சுஷ்மாராஜ். அனுஷ்காவைப் போலவே கர்நாடக மாநிலத்தில் வந்திருக்கும் இவரிடமும் அவரது முகசாயல் சற்று தென்படுகிறது.

அதனால் தற்போது கோடம்பாக்கத்தில் அடுத்த அனுஷ்கா வந்து விட்டார் என்று சுஷ்மாராஜை கூறுகிறார்கள். அதோடு, தற்போது இந்தியா பாகிஸ்தான் படத்தின் போட்டோக்கள், ட்ரெய்லர் வெளியாகிக்கொண்டிருப்பதால், அந்த போட்டோக்களில் அவரிடம் அனுஷ்கா சாயலைப்பார்த்த கோலிவுட் டைரக்டர்கள் அனுஷ்கா யாருக்கெல்லாம் எட்டாத கனியாக இருக்கிறாரோ அவர்களெல்லாம் இந்த சுஷ்மாராஜை வைத்து படம் பண்ணலாம் என்று கூறி வருகிறார்கள்.

இந்த சேதி சுஷ்மாவின் காதுகளுக்கு சென்றதை அடுத்து செம உற்சாகத்தில் இருக்கிறார். அதாவது, தற்போது அனுஷ்கா பெரிய பட்ஜெட் நடிகை என்பதோடு, விரைவில் அவர் நடிப்புக்கு குட்பை சொல்லி விடும் நிலையில் இருப்பதால், அவர் இடத்தை பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, கோலிவுட்டில் அழுத்தமாக காலூன்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சுஷ்மாராஜ். ஆக, இந்தியா பாகிஸ்தான் படம் ஹிட்டாகி விட்டால் எதிர்பார்த்தபடியே அடுத்த அனுஷ்காவாகி விடுவார் இந்த சுஷ்மாராஜ். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions