கொசுக்கள் உற்பத்தியை தடுக்க தவறியதாக சுஷ்மிதா சென்னுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி

Bookmark and Share

கொசுக்கள் உற்பத்தியை தடுக்க தவறியதாக சுஷ்மிதா சென்னுக்கு நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி

மும்பை மாநகராட்சி சார்பில் ஒவ்வொரு வருடமும் மழை காலத்தின்போது மாநகராட்சி பூச்சுக்கொல்லி குழுவினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்துகின்றனர்.

அப்போது கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கண்டறிந்து கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்த தவறும் வீடுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்படுகிறது. இதில் பிரபலங்களும் திரைப்பட நடிகர்களும் கூட தப்புவதில்லை. இந்த வருடமும் வழக்கம் போல சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவி வருவதையடுத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வகையில், முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது அவரது வீட்டில் டெங்குவை பரப்பும் கொசு உற்பத்தி இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடம் விளக்கம் கேட்டு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர் உரிய அபராதத்தை செலுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் இம்மாத துவக்கத்தில் நடிகர் சாகித் கபூருக்கும் இதேபோன்று மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Post your comment





Related News
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு நாலு வருஷமா குழந்தை இல்லை, அதனால்..! பிக்பாஸ் சென்ட்ராயன் எடுத்த முடிவு
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions