சூர்யா, கமல் எதற்கு சொல்ல வேண்டும், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தது என் தவறா? அமீர் ஓபன் டாக்

Bookmark and Share

சூர்யா, கமல் எதற்கு சொல்ல வேண்டும், ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தது என் தவறா? அமீர் ஓபன் டாக்

பருத்திவீரன் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டவர் அமீர். இவர் எப்போதும் அரசியல் கருத்துக்குறித்து மிக வெளிப்படையாக பேசுபவர்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘சமீப காலமாக கமல், அரவிந்த்சாமி, சூர்யா எல்லாம் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால், நான் ஒன்று கேட்கின்றேன், ஏன் மக்கள் சினிமாக்காரர்கள் கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர்?, அவர்களும் மக்கள் ஏதும் நினைத்துவிடுவார்களோ என்று தான் கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.

இதுமட்டுமின்றி மோடியின் கருப்புப்பணம் ஒழிப்பு திட்டத்திற்கு எதிராக நான் கருத்து தெரிவித்த அன்றைய நாள் முதல் நான் முஸ்லிமாகிவிட்டேன்.

அதுவரை என்னை யாரும் மதம் குறித்து பேசியது இல்லை, தற்போது எந்த கருத்து தெரிவித்தாலும், இஸ்லாம் மதத்தை சார்ந்தவர் அப்படித்தான் பேசுவார் என்கின்றார்கள்.

இந்த மதத்தில் பிறந்தது என் தவறா?’ என வெளிப்படையாக பேசியுள்ளார், இந்த பேட்டியை முழுமையாக பார்க்க....


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions