டாஸ்மாக் பாரில் சைட் டிஷ் விற்கும் காண்ட்ராக்டை எடுத்த மலையாள நடிகை..!

Bookmark and Share

டாஸ்மாக் பாரில் சைட் டிஷ் விற்கும் காண்ட்ராக்டை எடுத்த மலையாள நடிகை..!

தலைப்பை படித்தவுடனே நடிகைகள் இந்த பிசினஸ்ல கூடவா இறங்குவாங்க.. என்னம்மா இப்படி பண்றாங்களேம்மா என சொல்லத்தோன்றுகிறதோ..? அப்படி இந்த பிசினசில் இறங்கியுள்ள நடிகை யாரென்று பார்த்தால் அட..

மலையாள நடிகை மைதிலி.. ஆனால் இந்த வியாபாரத்தில் இறங்கியது தனக்காக அல்ல.. தனது தந்தைக்காகத்தான்.. அதே சமயம், நிஜத்தில் அல்ல.. 'ஸ்வப்னத்தேக்கால் சுந்தரம்' (கனவை விட அழகானது) என்ற படத்தில் தான்..

மலையாள சினிமாக்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில், குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் வெளுத்துக்கட்டுபவர் தான் இந்த மைதிலி. கதைப்படி மைதிலியின் தந்தை தினசரி ஏதாவது ஒரு பாரில் குடித்துவிட்டு விழுந்து கிடப்பதும், மைதிலி அவரை தூக்கி வந்து வீட்டில் போடுவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று.

இதனால் பார் ஏரியாக்களில் மைதிலி நன்கு அறிமுகம் ஆனவர் தான். திடீரென ஒருநாள் தந்தை இறந்துவிடவே, பிழைப்பிற்கு என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார் மைதிலி..

அப்போது பாருக்கு சைட் டிஷ் சப்ளை பண்ணும் வேலை கிடைக்கவே துணிந்து அந்த வேலைக்கு ஒப்புக்கொள்கிறார்.. இதனாலேயே இவருக்கு 'டாஸ்சிங்க்ஸ் ஜெயா' என்கிற பெயரும் உண்டாம். ஆக, இப்படி போகிறதாம் கதை. இந்தப்படத்தில் சீனிவாசன், லால் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கின்றனர்.


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
‘ஜோக்கர்’ ஹீரோ குரு சோமசுந்தரம் நடிக்கும் ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
சந்தானத்தின் சர்வர் சுந்தரம் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைத்த சந்தோசம் தாண்டி வருத்தம் இருக்கிறது - எஸ் ஆர் பிரபு
ஏன் அந்த மாஸ்டர், தனுஷ் படத்திலிருந்து விலகினார்? இன்று வரை தெரியவில்லை
சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு முடிந்தது – விரைவில் ரிலீஸ்!
ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்
சர்வர் சுந்தரத்துக்காக துபாய் சென்ற சந்தானம்
ஜோக்கர் பட நாயகன் குரு சோமசுந்தரம் வில்லன் ஆகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions