ஹீரோயின்கள் நடிக்க பயந்த படம்

Bookmark and Share

ஹீரோயின்கள் நடிக்க பயந்த படம்

புதுமுக இயக்குனர் நந்தன் என்பவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் பிரபா. மூன்று வயது குழந்தையையும், அவரது தாயையும் ஒரு தீவிரவாத கும்பல் கடத்திச் சென்று விடுகிறது.

அந்த கும்பலிடமிருந்து அங்கிருக்கும் சூழ்நிலைகளை பயன்படுத்தி, தனது குழந்தையுடன் அந்த தாய் எப்படி தப்பிக்கிறாள் என்பதுதான் கதை. ஹாலிவுட் பாணியிலான ஆக்ஷன் த்ரில்லர் கதை.

இதில் நடிக்கும் நாயகி ஆக்ஷன் சண்டை காட்சிகளில் நடிப்பதோடு மூன்று வயது குழந்தைக்கு தாயாகவும் நடிக்க வேண்டும். இந்த கதையை பல முன்னணி நடிகைகளிடம் இயக்குனர் நந்தன் கூறியபோது கதை நன்றாக இருக்கிறது.

ஆக்ஷன்கூட சமாளித்து விடலாம் அந்த மூன்று வயது குழந்தை எதுக்கு என்று கேட்டார்களாம். கடைசியில் துணிச்சலுடன் நடிக்க வந்தவர் சுவாசிகா. படத்தின் கதையை கேட்டு ஓகே பண்ணியவர், ஆக்ஷன் காட்சிகளுக்காக ஸ்டண்ட் மாஸ்டரிடம் ஒரு மாதம் வரை பயிற்சி எடுத்து நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் பலமுறை காயம் அடைந்திருக்கிறார்.

ஹீரோவாக விஜயராம் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையான இதில் ஜனனி என்ற இசை அமைப்பாளர், ஸ்ரீதேவி, சபீதா என்ற பாடலாசிரியர்கள், சவும்யா என்ற பாடகி, தேன்மொழி என்ற ஆடை வடிவமைப்பாளர் என ஏகப்பட்ட பெண்களும் அறிமுகமாகிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions