கீதாஞ்சலி டீமுடன் இணையும் ஸ்வாதி

Bookmark and Share

கீதாஞ்சலி டீமுடன் இணையும் ஸ்வாதி

தமிழில் சுப்ரமணியபுரம், போராளி, வடகறி என இவர் தேர்ந்தெடுத்த நடித்த அனைத்து படங்களுமே ஹிட் தான். கதைகளையும் அதில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை மட்டும் பார்த்து தெளிவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஸ்வாதி முதலில் தெலுங்கி தான் அறிமுகமானார் அதனால் அவரது தாய் வீடாக ஆந்திரா தற்போது திகழ்ந்து கொண்டிருக்கிறது, சென்ற வருடத்தில் தெலுங்கில் அவர் தொடர்ச்சியாக “சுவாமி ரா ரா” “கார்த்திகேயா” என இரண்டு ஹிட்டுகளை கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து அவருக்கு பல பெரிய வாய்ப்புகள் வந்தாலும் அவைகளை ஓரம்கட்டிவிட்டு இவருக்கு பொருத்தமான கதாபாத்திரத்துக்கு காத்திருந்த நேரத்தில்தான் அஞ்சலி நடிப்பில் வெளிவந்த ஹாரர் காமெடி படமான கீதாஞ்சலி படத்தை இயக்கிய இயக்குநரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

கீதாஞ்சலி படம் சென்ற வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. அதுமட்டுமில்லாமல் விநியோகஸ்தர்கள், தியேட்டர், தயாரிப்பாளர் என அனைவரிடமும் லாபத்தை கொடுத்த படம் அது.

இத்தனைக்கும் அது பெரிய இயக்குநரால் இயக்கப்படவில்லை அறிமுக இயக்குநர் ராஜ் கிரண் இயக்கினார். கதையை பிரபல எழுத்தாளர் கோணா வெங்கட் எழுதியிருந்தார்.

தற்போது ஸ்வாதியுடன் இவர்கள் இணைவதால் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
சுவாதி கொலை வழக்கு பட விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்
போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’
எனக்கு பாய்பிரண்டுகள் கூட கிடையாது - சுவாதி
நடிகைகள் சுவாதி, சுஷ்மாவுக்கு விரைவில் திருமணம்
திருமணத்திற்கு தயாரான சுவாதி
ஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions