ஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா

Bookmark and Share

ஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமான நடிகை சுவாதி ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். தற்போது யட்சன், யாக்கை போன்ற தமிழ் படங்களில் நடித்து வரும் சுவாதி தான் நடித்துள்ள தெலுங்கு திரைப்படமான திரிபுரா படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றார்.

இயக்குநர் ராஜ் கிரண் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஜூலை மாத இறுதியில் திரைக்கு வரும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை மையப்படுத்திய இப்படம் திகில் காட்சிகள் நிறைந்த பேய் படம் என டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகின்றது. திரிபுரா படத்தில் நடிகர் நவீன் சந்திரா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

நடிகை அஞ்சலி நடித்த கீதாஞ்சலி படத்தின் இரண்டாம் பாகமாக திரிபுரா படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கிரேசி மீடியா பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படுள்ளது.இப்படத்தை தமிழில் வெளியிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.


Post your comment





Related News
சுவாதி கொலை வழக்கு பட விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்
போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’
எனக்கு பாய்பிரண்டுகள் கூட கிடையாது - சுவாதி
நடிகைகள் சுவாதி, சுஷ்மாவுக்கு விரைவில் திருமணம்
திருமணத்திற்கு தயாரான சுவாதி
ஒரே நேரத்தில் ஆர்யாவுடன் இரண்டு படங்களில் நடித்த ஸ்வாதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions