இமான் இசையில் குத்து பாட்டு பாடும் சுவாதி

Bookmark and Share

இமான் இசையில் குத்து பாட்டு பாடும் சுவாதி

‘சுப்பிரமணியபுரம்’, ‘வடகறி’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சுவாதி. இவர் தற்போது பாடகராகவும் மாறியுள்ளார். ஜெயம் ரவி, திரிஷா, அஞ்சலி நடிப்பில் உருவாகி வரும் ‘அப்பாடக்கர்’  படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் வரும் ஒரு குத்து பாட்டை சிம்புவும், சுவாதியும் பாடினால் நன்றாக இருக்கும் என்று டி.இமான் நினைத்துள்ளார். இதனால் டி.இமான் சுவாதியை நாடியுள்ளார். இந்த செய்தியை தயாரிப்பு வட்டாராம் உறுதிப்படுத்துள்ளது. இந்த பாடலின் பதிவு இந்த வாரத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. ஆனால், உறுதியாக எந்த நாளில் பாடல் பதிவு நடைபெறும் எனத் தெரியவில்லை.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகைகள் பாடகிகளாக மாறி வருகின்றனர். நடிகைகள் ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன் ஆகியோர் பாடகர்களாகவும் தமிழ் சினிமாவில் புது அவதாரம் எடுத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது சுவாதியும் இணைந்துள்ளார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions