சுவாதி கொலை வழக்கு பட விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

Bookmark and Share

சுவாதி கொலை வழக்கு பட விவகாரத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

பலரையும் அதிர்ச்சியாக்கிய அந்த சம்பவத்தை வைத்து எஸ்.டி. ரமேஷ் என்பவர் சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் ஒரு படம் இயக்கியிருந்தார்.

இந்த தகவலை அறிந்த சுவாதியின் தந்தை சந்தன கோபால கிருஷ்ணன் இந்தப் படம் வெளியானால் எங்கள் குடும்பம் மனரீதியாக பாதிக்கப்படும். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதனால் இயக்குனர் எஸ்.டி. ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் சுப்பையா, கதை ஆசிரியர் ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மூவரும் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை வருகிற 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அதுவரை மூவரையும் கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டது.

 


Post your comment





Related News
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
ஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்
போனில் ஆபாசம். சி.ஆர்.சரஸ்வதி போலீஸ் புகார்
எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடக்கிறது... சொல்வது சி.ஆர்.சரஸ்வதி!
உழவர் திருநாளன்று வெளியாகிறது ‘யாக்கை’
எனக்கு பாய்பிரண்டுகள் கூட கிடையாது - சுவாதி
நடிகைகள் சுவாதி, சுஷ்மாவுக்கு விரைவில் திருமணம்
திருமணத்திற்கு தயாரான சுவாதி
ஜூலை இறுதியில் திரைக்கு வரும் சுவாதியின் திரிபுரா
ஒரே நேரத்தில் ஆர்யாவுடன் இரண்டு படங்களில் நடித்த ஸ்வாதி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions