திரிபுரசுந்தரியாக நடிக்கிறார் ஸ்வாதி

Bookmark and Share

திரிபுரசுந்தரியாக நடிக்கிறார் ஸ்வாதி

அருந்ததி படத்திற்கு பிறகு எல்லா நடிகைகளுக்குமே ஒரு படத்திலாவது பேயாக நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. அரண்மனை படத்தில் ஹன்சிகா நடித்தார்.

டார்லிங் படத்தில் நிக்கி கல்ராணி நடித்தார், 1பந்து 4ரன் 1 விக்கெட் படத்தில் ஹாசிகாதத் நடித்தார், சவுகார்பேட்டை படத்தில் ராய் லட்சுமி நடிக்கிறார் இந்த வரிசையில் தற்போது சுப்பிரமணியபுரம் சுவாதியும் சேருகிறார்.

திரிபுரசுந்தரி என்ற பேன்டஸி படத்தில் பேயாகவோ, ஆத்மாவாகவோ,  மறுஜென்ம பெண்ணாகவோ நடிக்கிறார் சுவாதி. அவருக்கு ஜோடியாக நவீன் சந்த்ரா நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, தலைவாசல் விஜய், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரவிகுமார் சானா ஒளிப்பதிவு செய்கிறார், கமரன் இசை அமைக்கிறார். சரவண சுப்பையா வசனம் எழுதுகிறார், ராஜா கிரண் என்ற புதுமுகம் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் தயாராகிறது.

சதீஷ் பிலிம் கார்பரேஷன் மற்றும் கிரேஸி மீடியா நிறுவனத்தின் சார்பில் தேவி ஸ்ரீதேவி சதீஷ், சின்னபாபு, ராஜசேகர் இணைந்து தயாரிக்கிறார்கள். கடந்த 26ந் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு தொடங்கியது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions