ஆமாம், நான் ஆன்ட்டி தான் - அடுத்த கமெண்ட் விவகாரம்!

Bookmark and Share

ஆமாம், நான் ஆன்ட்டி தான் - அடுத்த கமெண்ட் விவகாரம்!

நடிகை விசாகா சிங் சமூக வலைத்தளத்தில் போட்டிருந்த ஒரு புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் ஆபாசமான கமெண்ட் போட்டதைத் தொடர்ந்து அவரைத் திட்டித் தீர்த்தார் விசாகா சிங். அதற்கு பல நடிகைகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இப்போது 'சுப்பிரமணியபுரம்' சுவாதியை ஒரு ரசிகர் கமெண்ட் செய்யப் போக, அதற்கு சுவாதி ஒரு நீண்ட பதிலளித்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன் ஒரு செல்பி புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்டிருக்கிறார் சுவாதி. புடவையுடன் உள்ள சுவாதியைப் பார்த்ததும் ஒரு ரசிகர் தயவு செய்து இது போன்ற புகைப்படங்களைப் போடாதீர்கள், பார்ப்பதற்கு ஆன்ட்டி போலிருக்கிறீர்கள்,” என்ற ஒரு கமெண்ட்டைப் போட்டிருக்கிறார்.

இதைப் பார்த்ததும் கொதித்துப் போன சுவாதி, “ஆமாம், நான் ஆன்ட்டிதான். அது ஒன்றும் மோசமான வார்த்தை அல்ல, நான் கவலைப்படுவதற்கு. நான் என்றுமே 16 வயதான கலர்ஸ் சுவாதியாக இருக்க முடியாது. உங்கள் இலவச ஆலோசனைக்கு நன்றி, அங்கிள்” என பதிலளித்திருக்கிறார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது, “இப்படி மோசமாக கமெண்ட் அடித்திருப்பவரை ஒதுக்கி விட முடியாது. ஆன்ட்டியாக வளரும் போது நான் ஆன்ட்டியாகத்தான் இருப்பேன் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும். பத்திரிகைகளும், சமூக வலைத்தளங்களும் அனுமதித்ததை விட எடை கூடியிருந்தால், நான் ஆன்ட்டிதான். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். நான் பல ஆன்டிகளைப் பார்த்து வளர்ந்தவள்தான், அவர்கள் அனைவருமே சூப்பர் பெண்கள். நானும் அவர்களைப் போலவே வருவேன் என எதிர்பார்க்கிறேன். நான் இப்போது ஆன்ட்டிதான் என்பதை உணர வைத்ததற்கு நன்றி, இந்தப் படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான பாராட்டாக அதை ஏற்றுக் கொள்கிறேன், மீண்டும் நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.

சுவாதியின் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தான் இவ்வளவும் நடந்திருக்கிறது. சுவாதியின் பதிலையடுத்து கமெண்ட் செய்த நபர், அவருடைய கணக்கையே டெலிட் செய்து விட்டார். அவர் செய்த கமெண்ட் ஒரு சாதாரண கமெண்ட்தான், அதில் எந்த ஆபாசமும் இல்லை. ஆனால், சுவாதி அதற்கு பதிலளித்த விதம் தேவையற்ற ஒன்றாகவே இருப்பதாக டோலிவுட்டினர் தெரிவிக்கிறார்கள். 

சமூக வலைத்தளங்கள் மூலம் தற்போது 'பப்ளிசிட்டி' தேடிக் கொள்வது அதிகமாகி வருகிறது என்றும் பெரும்பாலானோர் தெரிவிக்கிறார்கள்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions