'புலி' படத்தை ரசிக்கத் தெரியாதவர்கள், ரசனை இல்லாதவர்கள்- டி.ராஜேந்தர் ஆவேசம்

Bookmark and Share

'புலி' படத்தை ரசிக்கத் தெரியாதவர்கள், ரசனை இல்லாதவர்கள்- டி.ராஜேந்தர் ஆவேசம்

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள 'புலி' படம் குறித்து, டி.ராஜேந்தர் கூறுகையில், "இது வழக்கமான தமிழ் படம் இல்லை. சமீப காலத்தில் இதுபோன்ற ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை. என்  படங்களுக்கு பிரமாண்டமான அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். 

ஆனால் 'புலி' படத்தின் பிரமாண்ட அரங்குகளைப் பார்த்து பிரமித்துப் போனேன். கிராபிக்ஸ் மிக நன்றாக இருக்கிறது. கரும்புலி, பேசும் பறவை, ஆமை என்று வித்தியாசமாக படக்குழுவினர் யோசித்து இருக்கிறார்கள்.

காட்சிகளை அழகாகக் காட்டி 'புலி' படத்தின் கதையைச் சொல்லி இருப்பது நன்றாக இருக்கிறது. 'புலி' படத்தை குழந்தைகளுடன் சென்று குடும்பமாக ரசித்து மகிழும் வகையில் உருவாக்கியுள்ளனர். 

மேலும் விஜய் இந்தப் படத்தில் நன்றாக நடித்துள்ளார். ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் என்று அனைவரும் பொருத்தமாக அவர்களுடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நான் குடும்பத்துடன் ’புலி’ படத்தைக் கண்டுகளிது சிரித்து மகிழ்ந்தோம். பொறாமை காரணமாக சிலர் வேண்டும் என்றே இந்த படத்தைப் பற்றி தவறான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வுருகின்றனர்.

'புலி' படத்தை ரசிக்கத் தெரியாதவர்கள், ரசனை இல்லாதவர்கள். புலி படத்தை தவறாக விமர்சிப்பவர்களின் மீது நானே நடவடிக்கை எடுப்பேன்" என்று கூறினார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions