7 நாட்களில் டி.ராஜேந்தர் பாடிய பாடல்

Bookmark and Share

7 நாட்களில் டி.ராஜேந்தர் பாடிய பாடல்

மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம்.வி.ஆர். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `7 நாட்கள்'. இயக்குனர்  பி.வாசுவின் மகன் சக்தி - நிகிஷா பட்டேல் நடிக்கும் இப்படத்தில், பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர்  முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். 

`அப்புச்சி கிராமம்` படத்திற்கு இசையமைத்த விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமத்துள்ளார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு  செய்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது.

மதன் கார்க்கியின் வரிகளில், டி.ராஜேந்தர் பாடிய பாடலான 'புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு' என்ற பாடல் நேற்று  வெளியிடப்பட்டது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் சக்தி, கணேஷ் வெங்கட்ராம், இயக்குனர் கௌதம்.வி.ஆர்., இசையமைப்பாளர் விஷால்  சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாடலை பாடிய டி.ராஜேந்தர் இப்பாடலை வெளியிட்டார்.


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions