சாம் டி ராஜ் இசையில் டி. ராஜேந்தர் வெளியிட்ட 'இதுதாண்டா ஜல்லிக் கட்டு ' பாடல் !

Bookmark and Share

சாம் டி ராஜ் இசையில் டி. ராஜேந்தர் வெளியிட்ட 'இதுதாண்டா ஜல்லிக் கட்டு ' பாடல் !

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மகுடம் சூட்டும் வகையில் இசை அமைப்பாளர் சாம் டி ராஜ் இசையில், பத்திரிகையாளர் சு. செந்தில் குமரனின் எழுத, விஜயலட்சுமி, உத்ய, ஷரவன் ஆகியோர் பாடிய இதுதாண்டா ஜல்லிக்கட்டு என்ற கம்பீரமான பாடலை சகலகலாவல்லவன் டி. ராஜேந்தர் யூ டியூபில் வெளியிட்டு வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வி இசட் துரையும் கலந்து கொண்டார்.'வந்தா மல' படத்துக்கு இசை அமைத்தவர் சாம் டி ராஜ். இவரது இசையில் பத்திரிகையாளர் சு. செந்தில் குமரனின் வரிகளில் உருவான பாடலை விஜயலட்சுமி, உத்ய, ஷரவன் ஆகியோர் பாடி இருக்கிறார்கள்.

இந்தப் பாடலை தனது இல்லத்தில் இருந்து யூ டியூபில் வெளியிட்டு வாழ்த்தினார் டி. ராஜேந்தர். நிகழ்வில் பேசிய டி. ராஜேந்தர், "சரியான சமயத்தில் சரியான முறையில் உருவாகி வந்திருக்கும் இந்த பாடலை நண்பர் சு செந்தில் நேர்மையான கருத்துகளோடு கூர்மையான சொற்களைப் பயன்படுத்தி எழுதி இருக்கிறார்.

அவருக்கு என் வாழ்த்துகள். அதற்கேற்ப இசையிலும் அந்த உணர்வை கொண்டு வந்துள்ளார் சாம் டி ராஜ் . அவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் .பாடிய விஜயலட்சுமி, உத்ய, சரவன் மூவரும் சிறப்பாக பாடி உள்ளனர்.

வார்த்தைகளை தெளிவாக உச்சரித்துள்ளது பாராட்டுக்குரிய விஷயம்.பாடலில் PETA அமைப்பை நாய் என்று திட்டியிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாய் என்பது காக்கும் கடவுள். கால பைரவரின் அடையாளம். அப்படிப்பட்ட பெருமை மிக்க நாய் என்ற வார்த்தையால் திட்டப்படுவதற்கு உரிய தகுதி கூட PETA அமைப்புக்கு இல்லை," என்றார்.

பரபரப்பான அந்த பாடல் வரிகள் உங்களுக்காக..
 

தொகையறா

தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !
தலையில் எவனும் கைய வச்சா
தவிடு பொடியாக்கடா !
பல்லவி
கொம்பைக் கூர் சீவி
கூருக்கு நேர் நின்னு
தாவிப் புடிப்போமடா !
அம்பா பாய்கின்ற
காளையை வெறும் கையால்
அணைச்சுப் புடிப்போமடா !
எங்க வீட்டுக்குள்
இன்னொரு பிள்ளையென
வாழும் கொலசாமிடா - அத
எப்படி வளக்கனும்னு
எனக்கு சொல்லித் தர
நாயே நீ யாரடா !
ஏறு தழுவுகிறோம்
என்ற வாரத்தையில்
இணையற்ற பண்பாட்டை
புரிஞ்சிக்கடா !
கூறு கெட்ட சில
கோட்டான் கூட்டத்தால
ஜல்லிக்கட்டு ஒரு நாளும்
அழியாதடா !
சரணம் 1

காளை மாடு ஒண்ணும் கரடி புலி சிங்கம் இல்ல
கபோதி புரிஞ்சிக்கடா
எங்க உழவனுக்கு எந்நாளும் துணையாகும்
ஜீவன் அதுதானடா !
பழகி விட்டா சிறு பச்ச புள்ள
அடிச்சா கூட அத வாங்கிக்கும்டா
புதுசா வந்து நீ கைய வச்சா
பொரட்டிப் போட்டு கொண்டாடுமடா !
காளைக்கும் தமிழனுக்கும் இருக்கிற பந்தமே
காலத்தை வென்றதொரு வரலாறடா !
ஒழுங்கா குளிக்கவே தெரியாத பயபுள்ளக
எங்கள குறை சொல்லக் கூடாதடா !

சரணம் 2

மாணவ தமிழ்க் கூட்டம் மனசு வச்சு எழுந்தாலே
மலையும் குழியாகும்டா
கன்யா குமரி முதல் மெரீனா சென்னை வரை
பொங்குது தமிழ் வீரம்டா !
சாதி மத சதி அரசியலால்
பிரிஞ்ச தமிழன் இன்று ஒண்ணா ஆனான்
சூது வாது சொல்லி பிரிச்சு வச்ச
துரோகி எல்லாம் தூள் தூளா போனான் .
இது ஒரு துவக்கமே இனி இல்லை கலக்கமே
எல்லா திசையிலும் வெற்றி நமக்கே
நட்புக்கு வணக்கமே பகைவனை அழிக்குமே
புதுசா பொறந்திருக்கும் இளைஞர் இயக்கமே !

 


Post your comment

Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
தில்லுக்கு துட்டு 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு
நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் கீர்த்தி சுரேஷ்
கமலுக்கு பேரனாகும் சிம்பு
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions