சிலுக்கு, கானாபாலா வரிசையில் டி.ராஜேந்தர்!

Bookmark and Share

சிலுக்கு, கானாபாலா வரிசையில் டி.ராஜேந்தர்!

ஒரு காலத்தில் படம் வியாபாரமாக சிலுக்கு சுமிதாவின் ஒரு பாட்டு தேவைப்பட்டது. கதை இருக்கிறதோ இல்லையோ சிலுக்கு இருக்கிறாரா என்றே. விநியோகஸ்தர்கள் கேட்டனர். அண்மைக்காலத்தில் ஏதாவது ஒரு குத்துப்பாடல் இருக்கிறதா என்று கேட்டனர். பிறகு கானாபாலா பாட்டு இருக்கிறதா. என்று கேட்க ஆரம்பித்து இன்று நிறைய படங்களில் கானாபாலா பாடி வருகிறார். பாடுவது மட்டுமல்ல தோன்றி நடித்தும் வருகிறார்.

சமீபகாலமாக டி.ராஜேந்தர் பாட்டு இருந்தால் வியாபாரத்துக்கு உதவும் என்று கூறுகிறார்களாம். அண்மையில் வந்துள்ள ரோமியோ ஜூலியட் படத்தை டி.ராஜேந்தரின் டண்டணக்கா பாடல்தான் காப்பாற்றியது என்று எஸ். தாணுவே கூறியிருக்கிறார்.

இப்போது டி.ராஜேந்தர் தோன்றிப் பாடினால் படம் வெற்றி என்கிற சென்டிமெண்ட் வந்திருக்கிறது. ரோமியோ ஜூலியட்டைத் தொடர்ந்து விழித்திரு படத்தில் பாடி ஆடியிருக்கிறார். பாடலுக்கு சத்தியன் மகாலிங்கம் இசையமைத்துள்ளார். வேறு ஒருவர் இசையில் டி.ராஜேந்தர் பாடுவது இதுவே முதல் முறையாகும். இதைத் தொடர்ந்து தங்கள் படங்களில் ஒருபாடல் பாடவும் தோன்றி நடிக்கவும் பலரும் கேட்டுள்ளார்களாம்.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions