இடியே விழுந்தாலும் தமிழ் நாட்டை விட்டு போக மாட்டோம்: டி.ராஜேந்தர் ஆவேசம்

Bookmark and Share

இடியே விழுந்தாலும் தமிழ் நாட்டை விட்டு போக மாட்டோம்: டி.ராஜேந்தர் ஆவேசம்

சிம்பு பாடிய பீப் சாங் இணையதளம் மூலம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி, சிம்பு மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் "தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம்" என்று அவர் பேசியிருந்தார்.

இந்நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் யாகத்தை டி.ராஜேந்தர் நடத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், ‘செய்யாத குற்றத்துக்கு சிலர் சதி செய்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் சிம்புவுக்கு பக்கபலமாக அவருடைய ரசிகர்கள் நிற்கிறார்கள்.

எங்களுக்கு பக்கபலமாக நிற்கும் அமைப்புகள், தாய்மார்கள், பெண்கள் கொடுத்த ஆதரவை மறக்க மாட்டேன். சிம்பு எங்கும் தலைமறைவாகவில்லை. சட்டரீதியாக அவர் பிரச்சினைகளை எதிர்கொள்வார்.

என் மகன் தமிழ்நாட்டை விட்டு அல்ல, இந்தியாவை விட்டு ஓடி ஒளிய மாட்டான். எந்த போலீஸ் ஸ்டேஷனில் அவனை ஒப்படைக்க வேண்டும், ஒப்படைக்கிறோம் என்று சொன்ன தமிழச்சி என் மனைவி.

எத்தனை இடி விழுந்தாலும், மழை வந்தாலும், வெள்ளம் வந்தாலும் டி.ராஜேந்தர் தமிழ்நாட்டில் தான் இருப்பான். எதிர்த்து நிற்பான், குரல் கொடுப்பான்’ என்றார்.


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions