சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டி

Bookmark and Share

சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.

இவர்கள் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி நடக்கிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 13-ந்தேதி. இறுதி வேட்பாளர் பட்டியல் 18-ந்தேதி வெளியிடப்படும்.

இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார்.

இவரது அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், செயலாளர்கள் பதவிக்கு கேயார், கதிரேசன் பொருளாளர் பதவிக்கு எஸ்.வி.சேகர் அல்லது கமீலா நாசர் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இன்னொரு அணியில் டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகிறார்கள். மற்றொரு அணியில் தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணனும், செயலாளர்கள் பதவிக்கு மன்னன், சிவசக்தி பாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு நடிகை தேவயானியும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 21 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 3 அணி சார்பிலும் 63 பேர் மோதுகிறார்கள்.

3 அணிகள் சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 1,210 பேர் மட்டுமே ஓட்டுப்போட தகுதி உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட கடந்த 5 வருடத்துக்குள் சொந்தமாக படங்கள் தயாரித்து இருக்க வேண்டும் என்றும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் சொந்த படத்தை கடந்த 6 மாதத்துக்குள் தணிக்கை செய்தவராக இருக்க வேண்டும் என்றும் சங்க விதிமுறைகள் உள்ளன. 


Post your comment





Related News
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்து அப்படி ஒரு வார்த்தை வருது கஷ்டம்- விஜய்யை புகழ்ந்த அட்லீ
பிகினி உடையில் கொண்டாட்டத்தில் ராதிகா ஆப்தே
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்
வெளிநாட்டில் வெளியானாலும் தமிழ்நாட்டில் பிரச்சனையில் சிம்புவின் AAA
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் எப்படி இருக்கு? சிம்பு பகிர்ந்த விமர்சனம்
காதல் திரைப்பட காமெடி நடிகர் பிச்சை எடுக்கிறாரா? வைரலாகும் தகவல்
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions