டி.ஆர் சொல்வதெல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான்!

Bookmark and Share

டி.ஆர் சொல்வதெல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான்!

சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடித்தவர் நயன்தாரா. அந்த படத்தில் நடித்தபோது காதலில் விழுந்த அவர்கள் பின்னர் காதலை முறித்துக்கொண்டனர். அதனால் அதன்பிறகு அவர்களை ஜோடி சேர்ந்து நடிக்க வைக்க நடந்த முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தது.

ஆனபோதும், அப்படி எதிரும் புதிருமாக இருந்த சிம்பு-நயன்தாராவை இது நம்ம ஆளு படத்தில் ஒன்றிணைத்து படத்தை தொடங்கினார் பசங்க பாண்டிராஜ். படப்பிடிப்பு தொடங்கியபோது சிம்புவை விட்டு விலகி நின்ற நயன்தாரா சில தினங்களில் மறுபடியும் நட்பு வளர்த்தார்.

இதனால் அவர்களுக்கிடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இயல்பாக வந்திருப்பதாக டைரக்டர் பாண்டிராஜ் கூறினர். ஆக, சிம்பு-நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்திருப்பதால் அந்த படத்திற்கு ரசிகர்களுக்கிடையே எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டது. ஆனால், பைனான்ஸ் பிரச்சினையினால் அப்படம் இப்போதுவரை முடியாமல் கிடக்கிறது.

அதன்காரணமாக இடைபட்ட நேரத்தில் ஹைக்கூ என்ற படத்தை இயக்கி முடித்த பாண்டிராஜ், அடுத்தபடியாக விஷால் நடிக்கும் படத்தின் பூஜையையும் நேற்று நடத்தினார். இந்நிலையில், பாண்டிராஜ்தரப்பில், இது நம்ம ஆளு பட நிலவரம் குறித்துக் கேட்டால், எப்போது பைனான்ஸ் ரெடியாகிறதோ அப்போது படப்பிடிப்பு தொடங்கும்.

மற்றபடி, இது நம்ம ஆளு படத்தை டீலில் விட்டு விட்டு பாண்டிராஜ் வேறு படத்தில் கவனம் செலுத்துவதாக டி.ஆர் சொல்வதெல்லாம் பப்ளிசிட்டிக்காகத்தான் என்கிறார்கள்.

மேலும், இப்போது விஷால் பட வேலைகள் ஆரம்பித்துள்ளது. பாயும்புலி படத்தில் நடித்து விட்டு அவர் வந்ததும் இந்தபட வேலைகள் தொடங்கப்பட்டு விடும். ஆக எங்கள் யூனிட் பிசியாக இயங்கிக்கொண்டிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.

 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions