நடிகர்கள் தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும்! -டி.சிவா

Bookmark and Share

நடிகர்கள் தயாரிப்பாளர்களை ஆதரிக்க வேண்டும்! -டி.சிவா

ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜிடம் உதவியாளராக இருந்த ராகவேந்திர பிரசாத் இயக்கியிருக்கும் படம் 54321. இரண்டு மணி நேரத்தில் நடக்கும் கதையில் இந்த படம் தயாராகியிருக்கிறது. புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் ஆடியோ-ட்ரெய்லரை தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் எஸ்.தாணு வெளியிட்டார்.

இந்தவிழாவில், தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா பேசுகையில், தமிழ் சினிமாவில் நாலைந்து நடிகர்களிடம் சிக்கிக்கொண்டு நாங்கள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறோம். அதனால் இன்னும் பத்து நடிகர்கள், பத்து நடிகைகள் பெரிதாக வளர வேண்டும.

அப்படி வளர்ந்து தயாரிப்பாளர்களை ஆதரிப்பவர்களாக, பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும், சினிமாவில் சினிமாவை காக்கும் நடிகர்கள், சினிமாவை அழிக்கும் நடிகர்கள் என்ற இரண்டு ரகம் இருக்கிறார்கள்.

ஆனால் புதிதாக வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களை ஆதரிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். சினிமாவை காத்து வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்பவர்களாக இருக்க வேண்டும் என்று ஆவேசமாகவே பேசினார்


Post your comment





Related News
மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை!
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
காஷ்மீர் தாக்குதலில் பலியான இராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் ஆறுதல்
வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு
தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்
கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா
விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்
ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions