ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் டாப்சி!

Bookmark and Share

ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் டாப்சி!

தமிழில் டாப்சி அறிமுகமான ஆடுகளம் அவருக்கு வெற்றியாக அமைந்தபோதும், அதற்கடுத்து நடித்த வந்தான் வென்றான் தோல்வி படமாகி விட்டது. அதனால் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் தெலுங்கு, இந்தி என்று நடித்து வந்த டாப்சி, தமிழில் அஜீத் நடித்த ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஒரு சிறிய ரோலில் நடித்தார்.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா-2 படத்தில் முக்கிய வேடத்தில் கமிட்டான டாப்சி, ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள வை ராஜா வை படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்த இரண்டு படங்களுமே ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன. அதோடு, இந்தியில் அவர் நடித்துள்ள ரன்னிங் சாதி.காம் என்ற படமும் தற்போது திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

ஆக, தற்போது டாப்சி நடித்துள்ள 3 படங்கள் ரசிகர்களை சந்திக்க தயாராகி விட்டன. இந்த படங்களில் காஞ்சனா-2 படத்தில் முதன்முறையாக அதிரடியான வேடத்தில் நடித்திருக்கும் டாப்சி, இந்த படங்கள் வெற்றி பெற்றால்தான் சினிமாவில் தனது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதால், பரீட்சை எழுதிவிட்டு காத்திருக்கும் மாணவி போன்று திக் திக் மனநிலையுடன் படங்களின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions