இனி, கேரக்டர்தான் முக்கியம் - டாப்ஸி

Bookmark and Share

இனி, கேரக்டர்தான் முக்கியம் - டாப்ஸி

தமிழில் அடுத்தடுத்து வெளிவந்த இரண்டு படங்களில் நடித்த டாப்ஸி இரண்டு படங்களிலுமே நல்ல பெயரை வாங்கியிருக்கிறார். 'காஞ்சனா 2, வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப்ஸிக்கு ஒரு ரீ-என்ட்ரியைக் கொடுத்திருக்கின்றன.

அதிலும் 'காஞ்சனா 2' படம் தெலுங்கிலும் வெற்றி பெற்று அங்கும் அவருக்கு மீண்டும் ஒரு கதவைத் திறந்து வைத்திருக்கிறது. 'வை ராஜா வை' படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் டாப்ஸி அந்த சில நிமிடங்களிலிலேயே ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.

'ஆடுகளம்' படத்தில் நாயகியாக அறிமுகமான டாப்ஸிக்கு அதன் பின் தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. 'வந்தான் வென்றான்' படுதோல்வியடைய 'ஆரம்பம்' படத்தில் டாப்ஸியை அட்ரஸ் இல்லாமல் செய்துவிட்டார்கள்.

தெலுங்கிலும் பெரிதாக வாய்ப்பு இல்லாததால், ஹிந்தியில் 'பேபி, ரன்னிங்ஷாதி.காம்' படங்களில் நடித்தார். 'பேபி' படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்திருந்தார். 'ரன்னிங்ஷாதி.காம்' விரைவில் வெளியாக உள்ளது.

இப்போது 'காஞ்சனா 2, வை ராஜா வை' படங்களின் மூலம் கிடைத்துள்ள திருப்புமுனையைத் தக்க வைத்துக் கொள்ள டாப்ஸி முயற்சி எடுக்க ஆரம்பித்துள்ளார். இனி, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions