ஒருமுறை விட்டால் செகண்ட் சான்ஸ் கிடைக்காது : டாப்ஸி கணிப்பு

Bookmark and Share

ஒருமுறை விட்டால் செகண்ட் சான்ஸ் கிடைக்காது : டாப்ஸி கணிப்பு

லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 2’ படத்தில் பேய் வேடம் ஏற்று தன்னால் இப்படியும் அசத்த முடியும் என ஷாக் கொடுத்திருக்கும் டாப்ஸி, அடுத்து இந்தியில் கவனம் செலுத்துகிறார்.

தமிழ், இந்தி என மாறி மாறி பறந்துகொண்டிருக்கும் டாப்ஸி கூறியது:

தமிழில்தான் ஹீரோயினாக அறிமுகமானேன். இந்தி படவுலகை பொறுத்தவரை மிகவும் கடினமான இடம் மட்டுமல்ல போட்டியும் நிறைந்தது. கண்ணை மூடிக்கொண்டு வேலையை மட்டுமே பார்ப்பது நல்லது. சில சமயம் நம் மீது யாரோ ஒருவர் சம்மந்தமே இல்லாமல் ஏதாவது ஒரு கமெண்ட் சொல்வார்கள். அல்லது கீழே சாய்க்கப் பார்ப்பார்கள். சினிமாவில் ஒருமுறை விட்டால் 2வது சான்ஸ் தரப்படுவதில்லை.

அக்‌ஷய்குமார் நடித்திருக்கும் படத்தில் ஹீரோயினுக்கு ஆக்‌ஷன் வேடமா என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு எனக்கு பேபி படத்தில் வாய்ப்பு அமைந்தது.

அதை பயன்படுத்திக்கொண்டேன். காரணம் ஹீரோயின்களுக்கு வித்தியாசமாக நடிப்பதற்கு  இதுபோன்ற வாய்ப்புகள் அதிகம் கிடைப்பதில்லை. ஹீரோயின்கள் தங்களுக்கான இடத்தை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்.

ஆரம்பகட்டத்தில் எந்த நடிகைக்கும் இந்த கதாபாத்திரம்தான் வேண்டும் என்று தேர்வு செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி தேர்வு செய்தால் சிலருக்கு அது பிடிக்காது. ஆனால் என்னுடைய தொழிலில் நல்லது எது, கெட்டது எது என்பதை என் விருப்பப்படித்தான் முடிவு செய்வேன்.இவ்வாறு டாப்ஸி கூறினார். 

 


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions