டாப்சியை ஏமாற்றியது யார்...?

Bookmark and Share

டாப்சியை ஏமாற்றியது யார்...?

'ஆடுகளம்' நாயகி நடித்துள்ள  'பேபி' திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பல பத்திரிகையாளர் சந்திப்புகளிலும், தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

எப்படியாவது பாலிவுட்டிலும் முக்கிய இடத்தைப் பிடித்துவிட வேண்டுமென டாப்சி முயற்சிக்கிறார். தெலுங்கில் ஓரளவிற்குப் பெயர் வாங்கினாலும் தமிழில் டாப்சியால் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை.

'ஆடுகளம்' படத்தைத் தவிர டாப்சிக்கு வேறு எந்தப் படங்களும் வெற்றியைத் தேடித் தரவில்லை. 'பேபி' படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் அவருடைய மனம் கவர்ந்தவரைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் டாப்சி.

“என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். என்னுடைய தோழி வீட்டில் கூட என்னை அவர் தங்க அனுமதித்ததில்லை. ஆரம்ப காலத்தில் தெலுங்கில் நடிக்க ஆரம்பித்த போது, என் மீது அனைவரும் பாசமாக இருந்தார்கள்.

அந்த நம்பிக்கையில் ஒருவருடன் நான் தங்கியிருந்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றிவிட்டார். அதன் பின் அவரை விட்டு நான் பிரிந்து விட்டேன். ஒரு வாரத்திற்கு அந்த பிரிவு என்னை கஷ்டப்படுத்தியது. பின்னர் அதிலிருந்து மீண்டுவிட்டேன்,” என டாப்சி கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் யார் என்பதைப் பற்றி டாப்சி எதுவும் கூறவில்லை. அனேகமாக அது யாராவது நடிகராகத்தான் இருக்கும் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா....!


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
ரசிகரின் கருத்து பதிலடி கொடுத்த டாப்சி
இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி
படுகவர்ச்சியாக பிகினி வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய டாப்ஸியின் தங்கை - கிளுகிளுப்பான ரசிகர்கள்.!
கல்யாணமா? யார் கிட்ட என்ன கேட்கறீங்க? - கொதித்த அஜித் பட நாயகி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த தனுஷ் நாயகி - போட்டோ உள்ளே.!
டாப்ஸிக்கு விமானத்தில் நேர்ந்த சோகம்! கடும் கோபத்தில் நடிகை
டாப்ஸியின் முதல் காதல், 6 வயதில் தொடங்கியது- ஓபன் டாக்
வசூல் ராணியான டாப்ஸி- பாலிவுட்டை கலக்குகிறார்
நான் அழகாக இல்லையா? இல்லை நடிக்க தெரியவில்லையா, நடிகை டாப்சி உணர்ச்சிவசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions