செவத்த புள்ளையாக இருப்பதால் டாப்ஸிக்கு இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

செவத்த புள்ளையாக இருப்பதால் டாப்ஸிக்கு இப்படி ஒரு சோதனையா?

சிவப்பழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் நடத்துவதால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் நடிகை டாப்ஸி.

சிவப்பாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்ததாகவும் டாப்ஸி தெரிவித்துள்ளார். டாப்ஸி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிங்க் இந்தி படத்தில் அவரின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

அமித் ராய் இயக்கத்தில் டாப்ஸி நடித்துள்ள ரன்னிங் ஷாதி. காம் படம் வரும் 17ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தை விளம்பரப்படுத்து வருகிறார் டாப்ஸி.

சிவப்பழகு கிரீம் 

இயற்கையாவே சிவப்பழகியான டாப்ஸி சிவப்பழகு கிரீம்களை ஆதரிப்பது இல்லை. சிவப்பு தான் அழகு என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

இந்நிலையில் மார்ச் மாதம் ஜெய்பூரில் சிவப்பழகு கிரீம் தயாரிக்கும் நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் டாப்ஸி.

டாப்ஸி 

ஜெய்பூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புக் கொண்டேன். நிகழ்ச்சியில் சிவப்பழகு கிரீமுடன் போஸ் கொடுக்க வேண்டும் என்றார்கள்.

அதை கேட்டவுடன் நிகழ்ச்சிக்கு வர முடியாது என்று கூறிவிட்டேன்.

பட வாய்ப்பு 

சிவப்பாக இருப்பதால் சில பட வாய்ப்புகளை இழந்தேன்.

அதனால் சிவப்பு தான் அழகு என்பதை ஒரு நாளும் நான் விளம்பரம் செய்ய மாட்டேன் என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் 

டாப்ஸி தற்போது நான்கு இந்தி படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் இந்தி மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
‘நான் தான் ‌ஷபானா’ படத்தில் உயிரை பணயம் வைத்து சண்டை காட்சிகளில் நடித்தேன்: டாப்ஸி
எங்களை சொல்வதற்கு நீங்கள் யார்- டாப்ஸியின் தைரியமான கருத்து
பாலியல் குற்றங்களுக்கு சினிமா காரணம் அல்ல: டாப்சி
அய்யோ பாவம், பாலிவுட்டில் டாப்ஸி இவ்ளோ கஷ்டப்பட்டுள்ளாரா?
பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்க கூடாது: நடிகைகள் வலியுறுத்தல்
எவ்வளவு கம்மியாக உடை அணியலாம்.. பெண்களுக்கு டாப்ஸி அட்வைஸ்
முன்னணி நடிகரை தாக்கிய டாப்ஸி
நல்ல படங்கள் அமைவது அபூர்வமாக இருக்கிறது: டாப்சி
டாப்ஸி ஒரு அகதியா?
போர்க்கப்பலை பற்றி ஹாலிவுட் தரத்தில் சொல்லும் காஸி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions