பிரபல நடிகை தபுவின் வாழ்வில் இப்படி ஒரு துயர சம்பவமா? சோகமான வாழ்க்கை

Bookmark and Share

பிரபல நடிகை தபுவின் வாழ்வில் இப்படி ஒரு துயர சம்பவமா? சோகமான வாழ்க்கை

நடிகை தபு சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதல் தேசம் படம் மூலம் அறிமுகமான இவர் அஜித்துடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்திலும் நடித்திருந்தார்.அப்பாவுக்கு ஆண்குழந்தை தான் பிடிக்கும்.

என் அக்கா பிறந்ததை பொறுமையாக ஏற்றுக்கொண்டவர் நான் பெண்ணாக பிறந்தது பிடிக்கவில்லை. என் மீது வெறுப்பை காட்டினார்.அம்மாவிற்கு என் மீது பாசம் அதிகம். இது அக்காவிற்கு பிடிக்காமல் என்னை பழி வாங்கிக்கொண்டே இருப்பார். சிறு வயதிலே அப்பா இறந்துவிட்டார்.

அம்மா தான் கஷ்டப்பட்டு வளர்த்தார்.அக்காவின் ஆதிக்கம் என் மீது அதிகமானது. சினிமாவில் தேவ் ஆனந்த் மூலமாக எனக்கு ஹம் நெளஜவான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.பின் அவர் மூலமே பாஸ்லே படத்தில் அவளுக்கு வாய்ப்பு வந்தது.

பின் என்ன. அவளை பிடிக்க முடியவில்லை. இந்த படத்திற்காக சுவிட்சர்லாந்து செல்ல அவளோடு என்னை துணைக்கு அழைத்து செல்வதாக சொல்லி பின் பழிவாங்கினாள். எனக்கு அது போல எண்ணம் இல்லை.என் மீது யாரும் ஆதிக்கம் செய்வதை விரும்பாத காரணத்தினால் தான் திருமணமே செய்துகொள்ள வில்லை என கூறினார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions