த்ரிஷ்யம் : தபு லுக் வெளியீடு

Bookmark and Share

த்ரிஷ்யம் : தபு லுக் வெளியீடு

த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கின் பர்ஸ்ட்லுக் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதில் நடித்துள்ள தபுவின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்த படத்தில், உத்வேகமிக்க போலீஸ் உயர் அதிகாரி மீரா தேஷ்முக் கேரக்டரில், தபு நடித்துள்ளார். பனோரமா ஸ்டூடியோஸ் மற்றும் வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் புரொடெக்சன் இணைந்து தயாரித்துள்ள த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கை, இயக்குநர் நிஷிகாந்த் காமத் இயக்கியுள்ளார்.

அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், தபு, ரஜத் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், ஜூலை மாதம் இறுதியில் திரைக்கு வர உள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions