மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க, மீண்டும் மலையாளத்தில் நுழைந்தார் தபு..!

Bookmark and Share

மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க, மீண்டும் மலையாளத்தில் நுழைந்தார் தபு..!

பாலிவுட் நடிகை தபு திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இத்தனை வருடங்களில் அவர் மலையாளத்தில் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

பிரியதர்ஷன் இயக்கிய ராக்கிளிப்பாட்டு (தமிழில் சிநேகிதியே), காலாபாணி (தமிழில் சிறைச்சாலை) ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானார். கடந்த 2011ல் மலையாளத்தில் சந்தோஷ் சிவன் இயக்கிய 'உருமி' படத்தில் நடித்தார்.

அதன்பின் நான்கு வருடங்கள் கழித்து தனது ஐந்தாவது படத்திற்காக மீண்டும் கேரளாவுக்குள் வர இருக்கிறார் தபு. அவர் ஜோடியாக நடிக்கப்போவது மெகாஸ்டார் மம்முட்டியுடன் தான். ஏற்கனவே 'தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்தவர்தான் தபு.

இந்தப்படத்தை பிரபல கதாசிரியரும் இயக்குனருமான ரெஞ்சி பணிக்கரி மகன் நிதின் தான் இயக்கவுள்ளார். மம்முட்டி இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions